சமூக ஊடகங்களில் அக்டிவாக இருப்பவர்கள் நடன ரீல் வீடியோக்களை உருவாக்குவதையோ அல்லது தெருக்களில் போட்டோஷூட் செய்வதையோ பார்ப்பது அசாதாரணமானது அல்ல.
அந்த வகையில், சுஷ்மிதா சென்னின் தில்பர் பாடலுக்கு ஒரு பெண் நடனமாடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் நோரா ஃபதேஹியின் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட பதிப்பின் காரணமாக மீண்டும் ட்ரெண்டில் உள்ளது.
தற்போது வைரலாகும் வீடியோவில் தோன்றும் யுவதி க்ராப் ரொப் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார். சந்தையொன்றின் வீதியின் நடுவில் நின்று யுவதி நடனமாடினார்.
இதில் சுவாரஸ்யமாக, ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் அந்தப் பெண்ணின் பின்னால் அதே பாடலுக்கு நடனமாடுவதை காணலாம். யுவதியின் அசைவுகளை பார்த்து அவரும் நடமாடுகிறார்.
அந்த நடன வீடியோவில் தோன்ற வேண்டுமென்பதற்காகவா அல்லது நடனமாடிய யுவதியை கேலி செய்வதற்காகவா அவர் ஆடினார் என்பது தெரியவில்லை.
अच्छा है आजकल रोड साइड लोगों को कंपनी मिल जाती है pic.twitter.com/PoLcw8U5Vs
— 24 (@Chilled_Yogi) October 6, 2022
எனினும், தனக்கு பின்னால் ஒருவர் நடனமாடுவதை யுவதி அறிந்திருக்கவில்லை.
நெட்டிசன்கள் இந்த வீடியோவை வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.