மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜோன் கம்ப்பெல்லுக்கு, ஊக்கமருந்து தடை விதியை மீறியதற்காக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (ஜாட்கோ) இந்த முடிவை எடுத்துள்ளது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனக் குழுவின் 18 பக்க முடிவில், மாதிரி சேகரிப்புக்குச் சமர்ப்பிப்பதைத் தவிர்ப்பது, மறுப்பது அல்லது சமர்ப்பிக்கத் தவறியது போன்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
காம்ப்பெல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக 20 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 2 ரி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.
ஏப்ரலில் கிங்ஸ்டனில் உள்ள அவரது வீட்டில் இரத்த மாதிரியை வழங்க மறுத்ததாக JADCO குற்றம் சாட்டியது.
காம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதி 2.3 ஐ மீறினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே 10 அன்று மீறல் குறித்த அறிவிப்பிலிருந்து தடை விதிக்கப்பட்டது.