யாழில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர் கைது!

Date:

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்ளாகி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் வயோதிபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மனைவியை குத்திக் கொன்ற கணவன்

கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி...

‘ஹிட்லர் அன்று சொன்னது சரிதான்’… இலங்கை தனியார் பேருந்து சங்க தலைவர்!

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை...

ஈரான் போரால் அதிகரிக்கும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்: அமெரிக்கா

அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளைக் குறைப்பதையும், ஈரானுடனான அதிகரித்து வரும் போரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்