கொடிகாமம் அல்லாரை புனித செபமாலை மாதா பேராலயத்திற்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
மரியன்னை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று காலை இடம்பெற்ற போதே புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
ஆலய பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
98 ஆண்டுகள் பழமையான செபமாலை அன்னை ஆலயம் நூற்றாண்டை முன்னிட்டு புதிய பேராலயமாக நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவான இன்று காலை திருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு செபமாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.