29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
கிழக்கு

பாலமுனை கடலில் அநாதரவாக நின்ற மீன்பிடி படகு!

இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் குறித்த படகு கைவிடப்பட்டுள்ளதை இனம் காண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.

சாய்ந்தமருது பொலிஸ் குழுவினர் கரையொதுங்கிய படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த படகில் மீனவர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் 10 நாட்கள் ஆகியும் அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!