பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துவதாக மாணவர் சங்கம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின், சட்டத்துறை யின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர்.
இம்மாதம் 14ஆம் திகதி பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை ஒன்றில் சட்டப்பிரிவு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, திணைக்களத்தின் கற்பித்தல் செயற்பாடுகளை இணையத்தளத்தில் மாத்திரம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தொடர்புடைய தாக்குதலுக்குப் பிறகு, ராகிங்கில் ஈடுபடாத மாணவர்களைத் தாக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மாணவர் சங்கத்திற்கு கால அவகாசம் அளித்து ஒன்லைன் அமைப்பு மூலம் கல்வி நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
மாணவர் சங்கங்கள் எழுத்துமூலமான உறுதிமொழியை சமர்ப்பிக்காததால், ஒன்லைன் படிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்தார்.
கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என மாணவர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.