தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், சங்க விதிகளை மீறி புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் கே.பாக்யராஜ், உதயா ஆகியோர் செயல்பட்டதாக அவர்கள் மீது உறுப்பினர்கள் சிலர், புகார் கூறியிருந்தனர். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதில் திருப்தி தராததால், 24 பேர் கொண்ட குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அதன்படி நடிகர் சங்கத்தில் இருந்து 6 மாதத்துக்கு அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1