முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீற்றர் எரிபொருளை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதித்தால், முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலின் போது, எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்க ஜனாதிபதியின் ஆலோசகர் தீர்மானத்திற்கு வந்ததாக ஜயருக் கூறினார்.
பின்னர், மேலதிக எரிபொருள் விலையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு செயலகம் இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1