காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
குடும்பமாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கால நீடிப்பினை வழங்கக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1