25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

வங்கியின் முன்பாக 223 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த இருவர் மடக்கிப் பிடிப்பு (CCTV)

தம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த இரண்டு சந்தேகநபர்கள் பணம் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக சுமார் 22.3 மில்லியன் ரூபாவை கொண்டு வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர் தொழிலதிபரின் பணப்பையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடினர்.

அந்த பகுதியால் பயணித்த தம்புத்தேகம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் புத்திக குமார இதனை அவதானித்து, உடனடியாகச் செயற்பட்டு சந்தேகநபர்கள் இருவருக்கு முன்னால் பாய்ந்து, அவர்களின் வழியைத் தடுத்தார்.

எதிர்பாராமல் எதிரே வந்த பொலிஸ் உத்தியோகத்தரை பார்த்து திடுக்கிட்ட கொள்ளையர்கள், பொலிஸ் உத்தியோகத்தர் மீது மிளகாய் பொடியை வீசியுள்ளனர்.

சந்தேகநபர்கள் தங்களிடம் இருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கியை செயற்படுத்திய போதும் அது செயற்படவில்லை

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர்களில் ஒருவர், வர்த்தகர் பணத்தை வைப்பிலிட வந்த வங்கியின் தனியார் பாதுகாப்பு அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

Leave a Comment