25.4 C
Jaffna
March 12, 2025
Pagetamil
இலங்கை

கோட்டாவின் மனைவியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற தமிழருக்கு பிணை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்ஷவை மிரட்டி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கொலன்னாவ, சாலமுல்ல, லக்சட செவன பகுதியைச் சேர்ந்த கணேசன் ஜெகன் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபத்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. சேனாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

தாம் வேறு ஒருவரிடம் 4 இலட்சம் ரூபாவை வழங்கியதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஊகித்து இந்த அழைப்பை மேற்கொண்டதாகவும் சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் இந்த வாக்குமூலங்கள் முரண்பாடானதாக இருப்பதால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 06ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி யாழில் கையெழுத்து

Pagetamil

இலங்கை வந்ததும் அர்ச்சுனாவை பற்றி படித்த கீர்த்தி சுரேஷ்

Pagetamil

பணிப்பாளர் அசமந்தமா?: யாழ் போதனாவில் மீண்டும் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

ரெலோவிலிருந்து விலக்கப்பட்ட விந்தன் தமிழரசு கட்சியில் இணைவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!