Pagetamil
இலங்கை

மன்னாரில் தியாகி திலீபன் நினைவு!

மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை (26) காலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மத தலைவர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment