25.6 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

மத வழிபாட்டு தலங்களின் மின் கட்டணம் பற்றி இன்று கலந்துரையாடல்!

வழிபாட்டுத் தலங்களின் மாதாந்த மின் கட்டணம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக மாதாந்த கட்டணங்கள் வசூலிக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக அண்மைய நாட்களில் அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

திருத்தியமைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தினால் மத நிறுவனங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை எடுத்துரைத்து மூன்று பௌத்த பிரதம பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக மத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து மகாநாயக்கர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மத ஸ்தலங்கள் செய்யும் சமூக சேவையை குறைத்து மதிப்பிடும் வகையில் கட்டண திருத்தம் காரணமாக சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், நிதி ஆதாயத்தை உருவாக்கும் நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மின்சார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு சூரிய மின்சக்தித் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் மகாநாயக்கர்கள் முன்மொழிந்தனர்.

பொது மக்களுக்கு ஆற்றும் சமூக சேவையை கருத்தில் கொண்டு மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணக் கொள்கையொன்றை அறிமுகம் செய்யுமாறும் மகாநாயக்கர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

east tamil

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள்

east tamil

UNP, SJB இணைவு

east tamil

மாவையின் உடலுக்கு அனுர அஞ்சலி

Pagetamil

வடக்கில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் இனி பயணச்சிட்டை கட்டாயம்!

Pagetamil

Leave a Comment