சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வொலிவோரியன் கிராமத்துக்கான மையவாடியை அமைத்து தர உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பிரதேச செயலாளருக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களால் மகஜர் கையளிக்கப்பட்டு உள்ளது.
லக்ஸ்டோ மீடியா ஊடக வலையமைப்பின் முன்னெடுப்பில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு நேரில் சென்று முறைப்பாடு மேற்கொண்டனர்.
பொதுநல செயற்பாட்டாளரும், பல்துறை கலைஞரும், வொலிவோரியன் கிராமத்தை சேர்ந்தவருமான அஹமட் லெப்பை அன்ஸார் தலைமையில் சென்ற இவர்கள் உதவி பிரதேச செயலாளரை சந்தித்து பேசினர்.
வொலிவோரியன் கிராமத்தில் மையவாடி அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பிரதேச செயலாளராக ஏ.எல்.எம். சலிம் பதவி வகித்தபோது ஒதுக்கி கொடுக்கப்பட்ட இடத்தில் தற்போது மடுவம் அமைக்க சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன, இதை அனுமதிக்க கூடாது என்று உதவி பிரதேச செயலாளருக்கு அன்ஸார் எடுத்து சொன்னார்.
பிரதேச செயலாளரின் சார்பாக உதவி பிரதேச செயலாளர் மகஜரை பெற்று கொண்டார்.