வவுனியாவில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கை பூவரசங்குளம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது.
இன்று (24) அதிகாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தம்பனை பகுதியில் இருந்து வவுனியா நகரப்பகுதிக்கு கப்ரக வாகனத்தில் மரங்கள் கடத்தி செல்லப்படுவதாக பூவசரங்குளம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குறித்தபகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மரங்களை கடத்திச்சென்ற வாகனத்தை மடக்கிப்பிடித்தனர்.
குறித்த வாகனத்தில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அதிலிருந்து 6முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றுள்ளநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1