26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

நந்திக்கடல், நாயாறு, சாம்பல்தீவு பகுதிகள் வனப்பாதுகாப்பு வலயங்களாகிறது!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பல்தீவு மற்றும் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாசடைந்த நீரேரிகளை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், பணிகளை துரிதப்படுத்துமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் அமரவீர ஆலோசனை வழங்கினார்.

மேலும், பல்வேறு மனித நடவடிக்கைகளால் நாயாறு மற்றும் நந்திக்கடல் பகுதிகள் மாசுபடுவதாகவும், ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு குளங்கள் நிரப்பப்படுவதால் சதுப்புநிலங்கள் மற்றும் குளத்தை சார்ந்த உயிரினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டு நீரேரிகளையும் பாதுகாப்பதற்கான உண்மைகளை ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சர் தீர்மானித்ததுடன் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

Pagetamil

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரின் சட்டவிரோத துப்பாக்கிச்சூடு… ரணில் வழங்கிய பணப்பரிசில்: சிஐடி புதிய விசாரணை!

Pagetamil

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

Leave a Comment