8 வயது சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியில் வசிப்பவராவார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது கணவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு முதல் திருமணத்தில் 8 வயது மகளும், இரண்டாவது திருமணத்தில் 2 வயது மகனும் இருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி தனது உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆங்கில ஆசிரியரிடம் கூறியதாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் நிலைமையை தாய்க்கு தெரிவித்து சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்தபோது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தினார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.