தரம் 5 இல் கல்வி கற்கும் இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பீலமடுல்லவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவரை கைது செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சந்தேக நபர் 10 வயதுடைய இந்த சிறுமிகள் கல்வி கற்கும் தரம் 5க்கு பொறுப்பான ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் இந்த மாணவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாடசாலையில் தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சைக்காக அவரால் நடத்தப்பட்ட வகுப்புகளின் போதே இந்த குற்றத்தை செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1