இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனுரில் ரூபாய் 17 கோடியே 17 லட்சம் செலவில் கடந்த எட்டு மாதத்தில் 321 தனி தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மறுவாழ்வு முகாமை 321 தனி தனி வீடுகள், குடிநீர் வசதி, அங்கன்வாடி மையம், நூலகம் ,குளியலறை ,சமுதாயக்கூடம் ,பூங்கா ,மைதானம், சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1