28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

இரவுகளில் பெண்கள் நடமாட அச்சப்படும் நெல்லியடி நகர்ப்பகுதி!

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வந்து செல்கின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையினர் , கரவெட்டி பிரதேச சபையோ பாரமுகமாக இருக்காது, மலசல கூடத்தினை தூய்மையாக பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரவு வேளைகளில் பேருந்து நிலையத்தில் கூடும் சிலர் அங்கே மது அருந்துதல் , போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் பேருந்து நிலையம் அதனை சூழவுள்ள பகுதிகள் மலசல கூடங்கள் என்பன வெற்று பியர் ரின்கள் , வெற்று மதுப்போத்தல்கள் அவ்விடத்தில் காணப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளினால் இரவு வேளைகளில் பேருந்துக்களில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கும் பெண்கள் உள்ளிட்டவர்கள் அச்சத்துடனையே இறங்கி செல்கின்றனர்.

எனவே இது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கோர விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

யாழ் முன்னாள் எம்.பியொருவர் விரைவில் கைதாவார்: சுமந்திரன் ஆருடம்!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!