28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இந்தியா

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை!

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகையின் தூக்கிட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலன் மகள் தூரிகை. எழுத்தாளரான தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் டிஜிட்டல் இதழை தொடங்கி, பெண்களுக்கான பத்திரிகையாக நடத்திவந்தார்.

இதனிடையே, இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணம், தற்கொலையென பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தூரிகை எழுத்தாளராக மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவரின் தற்கொலை சினிமா மற்றும் எழுத்தாளர்கள் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment