வங்கி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் பணம் எடுக்க வந்த நபர்களை ஏமாற்றி சுமார் 2 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட சந்தேகநபர் கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் செப்டம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய கடுவெல பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மல்வானை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பவர்களுக்கு உதவி செய்யும் போர்வையில் முன் வந்து அவர்களது இரகசிய இலக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
வேறு ஏடிஎம் இயந்திரங்களுக்குச் சென்று அவர்களது கார்ட் இலக்களை, தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது அட்டைகளின் இரகசிய இலக்கத்தை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என கடுவெல பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.




