சமந்தா பவர் இலங்கை வருகிறார்!

Date:

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சமந்தா பவர் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை அவர் இலங்கை வரவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு உட்பட பல அரச அதிகாரிகளுடன் சமந்தா பவர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் நேற்று தெரிவித்ததை அடுத்து அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்