கனடா கத்திக்குத்து தாக்குதல்: தலைமறைவாக இருந்தவரும் கைது!

Date:

கனடாவில் 10 பேரைக் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்த கத்திக்குத்துத் தாக்குதலின் இரண்டாவதும் இறுதியுமான சந்தேக நபர் நான்கு நாள் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் சஸ்காட்சுவானின் ரோஸ்தெர்ன் அருகே மைல்ஸ் சாண்டர்சன் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்,” என்று சஸ்காட்செவன் பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

“இந்த விசாரணை தொடர்பான பொது பாதுகாப்புக்கு இனி ஆபத்து இல்லை,” என்று அது மேலும் கூறியது.

அவரது சகோதரரும் சக குற்றவாளியுமான டேமியன் இறந்து கிடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரோயல் கனடியன் மவுண்டன் பொலிஸ் (ஆர்.சி.எம்.பி) திங்களன்று டேமியனின் உடலை ஃபர்ஸ்ட் நேஷனில் புல்வெளி பகுதியில் கண்டெடுத்தது.

31 வயதான கொலை சந்தேக நபர் சுயமாக ஏற்படுத்திய காயங்களால் இறந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மைல்ஸ் மீது முதல் நிலை கொலை, கொலை முயற்சி மற்றும் உடைத்து உள்ளே நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திங்கட்கிழமை அவர் இறந்து கிடப்பதற்கு முன்பு அவரது சகோதரர் டேமியனும் குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் ஆகிய பழங்குடியின சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் பல கத்திக் குத்துச் சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட அனைவரும், ஒருவரைத் தவிர, க்ரீ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர், அருகிலுள்ள வெல்டனில் தனது வயது முதிர்ந்த பேரனுடன் வசித்து வந்த ஒரு விதவை ஆவார். தாக்குதலில் காயமடைந்தவர்கள் 17 பெரியவர்கள் மற்றும் ஒரு இளம் வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்