நடிகை தமிதாவிற்கு விளக்கமறியல்!

Date:

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூத்த நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் இருக்கும் போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சந்தேகநபர் குற்றமிழைத்துள்ளதாக பொலிஸார் அபேரத்னவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன, தமிதாவிற்கு எந்தவொரு நிபந்தனையிலும் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.

சந்தேகநபர் ஒரு சம்பவத்திற்காக பிணையில் இருந்த போது இதேபோன்ற குற்றத்தை செய்து பிணை சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்தார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்