இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் பூநகரியில் சிக்கியது!

Date:

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை பூநகரியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

36 பாரிய மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1500 கிலோகிராம் மஞ்சளை இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (செப்டம்பர் 07 மாலை) கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது, ​​பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட குறித்த மஞ்சளானது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக குறித்த சந்தேகநபரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட மஞ்சள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்