பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்

Date:

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டனர்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரும், ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடலும், அதன்பின்னர் வெளியான ‘சோழா சோழா’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (6) நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசான் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.

சுமார் 3.23 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர். நடிகர் கமல்ஹாசனின் குரலில் தொடங்கும் இந்த முன்னோட்டம் அப்படியே பொன்னியின் செல்வன் கதை களத்திற்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. சமர், காதல், வஞ்சம், நட்பு, பகை என ஒவ்வொரு ஃப்ரேமும் நகர்கிறது. குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் மூலம் கவர்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்