இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!

Date:

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.விளையாடியது. ஓவர் வரை இந்த போட்டி சென்றிருந்தது.

டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணயச்சுழற்சியில் வென்றது. இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 173 ரன்களை எடுத்தது.

கப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்கள் களம் இறங்கி இருந்தனர். இரண்டாவது ஓவரில் ராகுல், 6 ரன்கள் எடுத்து மகேஷ் தீக்ஷன சூழலில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் மதுஷங்கவின் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்னர் கப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை மீட்டனர். இருவரும் 58 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தனர். ரோகித் 72 ரன்களிலும், சூர்யகுமார் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் வெளியேறினார். ஹூடா 3 ரன்களிலும், பந்த் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.

மதுஷங்க 24 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

பதும் நிசாங்க மற்றும் குசல் மெண்டிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவில்லை. 11.1 ஓவர்களில் இலங்கை 97 குவித்து அட்டகாசமான தொடக்கத்தை பெற்றிருந்தது.

ஆனால் 14.1 ஓவர்களில் 110 ரன்களிற்கு 4 விக்கெட் என சறுக்கியது. ‘பழைய’ இலங்கையாக மாறுகிறதா என்ற கவலை ரசிகர்களிற்கு எழுந்த போது,  பானுக ராஜபக்‌ஷ, தசுன் சானக ஆட்டத்தின் போக்கை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

12வது ஓவரில் சஹால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 14 மற்றும் 15வது ஓவரில் அஸ்வின் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் மூலம் இலங்கை அணிக்கு ஆட்டத்தில் கொஞ்சம் அழுத்தம் கூடியது. பனுக ராஜபக்ச மற்றும் தசுன் ஷானக கிரீஸில் இருந்தனர். இருவரும் நேர்த்தியாக இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்தனர்.

இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் இலங்கை அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் தசுன் சானக.

இதன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் மட்டுமே இலங்கைக்கு இறுதிக்கு செல்வதில் நெருக்கடி ஏற்படும்.

மறுவளமாக, எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் பெரிய தோல்விகளை சந்தித்து, இந்தியா ஆப்கானை வீழ்த்தினால் மாத்திரமே இந்தியாவிற்கு ஏதாவது வாய்ப்புண்டு. அத்துடன், இந்த ஆசிய கிண்ண இறுதியாட்டத்தில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதாது.

ஆசிய கிண்ணத்தில் இலங்கை தொடர்ந்து பெரிய இலக்குகளை சேஸ் செய்து வருகிறது. தொடர்ந்து 3வது முறையாக 170 இற்கும் அதிக ஓட்டங்களை விரட்டியடித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்