இடித்து விட்டு ஓடிய மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர் கைது!

Date:

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கடந்த  2ஆம் திகதி வெலிகந்த – புல்லியாரடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்தி வந்த நிலையில் வைத்தியர் கைதாகியுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி காரில் பயணித்த குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

வெலிகந்த, அசேலபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நுவன் சாந்த என்ற இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து இடம்பெற்ற போது அவ்வழியாகச் சென்ற லொறி சாரதி ஒருவர், காரின் இலக்கத்தை வெலிகந்த பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

இதன்படி, மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த கார் வைத்தியருக்கு சொந்தமானது என வெலிகந்த பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்