கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் மூவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் 35, 38 மற்றும் 44 வயதுடைய பாதுக்க மற்றும் வடரெக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




