உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஒருவருக்கு பிணை

Date:

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த ணருவரை பிணையில் விடுவித்ததுடன் 29 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (6) திகதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 11 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன் 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 30 பேர் தொடர்ந்து நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, மொனராகலை திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படவர்களை நீதிமன்றில் அழைத்துவரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஒருவரை பிணையில் விடுவித்ததுடன் நீதிமன்றிற்கு தற்போதைய நாட்டின் எரிபொருள் சூழ்நிலை காரணமாக அழைத்து வரமுடியாமல் போன கைதிகள் தொடர்பாக இணைய கணொளி மூலம் வழக்கு இடம்பெற்றதையடுத்து ஏனைய 29 பேரையும் எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்