அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கும்பிச்சாங்குளம் ஏரிக்கரையில் குடிபோதையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் அநுராதபுரம் நகரிலுள்ள அரச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி மற்றும் மூன்று மாணவர்களை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணை தனித்தனியாக விடுதலை செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். .
சந்தேகத்திற்குரிய மாணவி மற்றும் மூன்று மாணவர்களின் பெற்றோரை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வரவழைக்குமாறு அநுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்ட பிரதான நீதவான் நாலக ஜயசூரிய, சந்தேகத்திற்குரிய மாணவி மற்றும் மூன்று மாணவர்களையும் அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய மாணவி மாத்திரம், பொது இடத்தில் குடித்துவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதற்காக பொலிஸாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி சஞ்சய் ரத்நாயக்கவின் ஊடாக நீதிமன்றில் தெரிவித்தார்.
பொது இடத்தில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக பொலிசாரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மற்ற மூன்று மாணவர்களும் மறுப்பதாக சட்டத்தரணி துலானி கவீஷா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவி மற்றும் மூன்று மாணவர்களையும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், அவர்கள் மதுபோதையில் இருந்தார்கள் என சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்திய மருத்துவ பரிசோதனை அறிக்கைகளையும் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.