450 கிராம் பாண் ஒன்றின் விலையை 300ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானம். இன்று எடுக்கப்படும்.
இது தொடர்பில் இன்று காலை வர்த்தக அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பாணின் விலையை அதிகரிக்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அதனால் அத்தகைய பொருட்களின் தேவை சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டார்.
பேக்கரி பொருட்களின் விலையை மேலும் உயர்த்தினால், தொழில்துறை வீழ்ச்சியடையக்கூடும் என்றார்.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமா கடந்த சனிக்கிழமையன்று, 450 கிராம் பாணை ரூ.300க்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.