அதிக விலைக்கு முட்டைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவருக்கும், அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த இருவருக்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் ருத்ரிகா டி சில்வா ஹேவாவசம் அபராதம் விதித்தார்.
விநியோகஸ்தரின் 7,500 முட்டைகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
இவ்வாறு, ஹெட்டிபொல திபுல்வெவ பகுதியைச் சேர்ந்த ஜே.எம்.தரிந்து மலிங்க என்ற முட்டை விநியோகிக்கும் வர்த்தகருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் உத்தரவாத விலையான 43 ரூபாவிற்குப் பதிலாக 49 ரூபாவுக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த மேலும் இரு கடைக்காரர்களுக்கும் அபராதம் விதித்தார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அநுராதபுரம் மாவட்ட அலுவலகத்தின் தலைவரும் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியுமான பி.ஏ.சி.பி. பெரேரா சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1