25.6 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

மேற்கு கடற்பிராந்தியங்களிற்கு செல்லாதீர்கள்!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மேற்குக் கடற் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்காக கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும், கடல் பகுதிகளில் சுமார் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை அலைகள் எழ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேற்படி கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்: இந்திய துணைத்தூதருக்கு சீ.வீ.கே கடிதம்!

Pagetamil

‘அரிசி ஆலைகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்’: ஜனாதிபதி எச்சரிக்கை!

Pagetamil

பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Pagetamil

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

Pagetamil

Leave a Comment