27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு

கிழக்கு பல்கலைக்கழக்த்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆண் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை (5) ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1990 ம் ஆண்டு செட்டெம்பர் 5 ம் திகதி  வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில் சுமார் 176 க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சா பீட மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழத்தின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட 32 வது நினைவேந்தலையிட்டு படுகொலை செய்யப்பட்வர்களின் உறவுகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து படு கொலை செய்யப்பட்டோருக்கு நீதி வேண்டும், ஏற்கே எங்கே எமது உறவுகள், 1990-9-5 பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட உறவுகள் எங்கே, இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராடுவது, அரசே சாட்சிகளை அச்சுறுத்துவதை நிறுத்து. எமது உறவுகள் எமக்கு வேண்;டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் செங்கலடி பொது மயான சுத்தம்

east tamil

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல்

east tamil

Update – திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

Leave a Comment