LTTE குமார் என்றழைக்கப்படும் கொள்ளையர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை ஹட்டன் பொலிஸின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாட்டில் பல பகுதிகளுக்குச்சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – செனன் பகுதியில் உள்ள தோட்ட அதிகாரியொருவரின் வீட்டில் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசி கொழும்பில் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
அந்நபரிடம் சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று இருந்துள்ளது. அதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போதே சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் பல பெண்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளார். அவர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடித்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவரிடமிருந்து தங்க நகை, தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.