Pagetamil
இலங்கை

தொண்டைமானாறு ஆற்றில் முதலை: அவதானமாக நீராடுமாறு சந்நிதி நிர்வாகம் அறிவிப்பு

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் செல்வச் சந்நிதி ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் நீராடுபவர்களை அவதானமாக நீராடுமாறு செல்வச் சந்நிதி ஆலய நிர்வாகத்தினர்அறிவித்துள்ளனர்,

ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் வந்துள்ளதன் காரணமாக ஆற்றில் நீராடும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் என கேட்டு கொள்வதோடு ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளேயும் அதேபோல் மிக அவதானமாகவும் நின்று உதவிக்கு ஆட்களுடன் நின்று மேற்பார்வை செய்து நீராடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் மிக மிக அவதானமாக நீராடுவதை கருத்தில் கொள்ளுமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம்என அறிவித்துள்ளனர்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment