குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை உதைத்ததாகக் கூறப்படும் லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஜூலை 03ஆம் திகதி ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து உதைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் இராணுவமும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் சிறிலங்கா இராணுவ சட்டப் பணிப்பாளர் ஓகஸ்ட் 01 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரிந்துரைகளை அமுல்படுத்துவதை நிறைவு செய்து, இது தொடர்பான அறிக்கையை செப்டெம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறும் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளது.