24.9 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி நகர சபைக்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்யவும்: பிரதமருக்கு சந்திரகுமார் கடிதம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினை நகர சபையாக தரம் உயர்த்தும்
அமைச்சரவை அனுமதி மகிழச்சி தருக்கிறது. இருப்பினும் நகர சபைக்கான எல்லை
நிரணயத்தில் சமூகங்களை பிரிக்கின்ற வகையிலும், குறுகிய அரசியல்
இலாபங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில்
பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கிளிநொச்சி நகர சபைக்கான
எல்லை நிர்ணயத்தை மீள பரீசீலனை செய்து நியாயமான அடிப்படையில் அனைத்து
தரப்பினர்களதும் கருத்துக்களை பெற்று வரையறுக்குமாறு கோரி பிரதமருக்கு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் செயலாளருமான மு.
சந்திரகுமார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

சன அடர்த்தி செறிவாகவும், நகர கட்டமைப்பொன்றுக்கு தேவையான அனைத்து
அம்சங்களை தன்னகத்தே வைத்திருந்தும் நீண்டகாலமாக பிரதேசசபை என்ற
தகுதிநிலையில் நிர்வகிக்கப்படும் கிளிநொச்சி நகரினை, நகரசபை என்ற
படிநிலைக்கு தரம் உயர்த்துவதற்குரிய முன்மொழிவுகள் தங்களது அரசால்
வெளியிடப்பட்டிருப்பதை கிளிநொச்சி நகர மக்களின் சார்பில் பேருவகையுடன்
வரவேற்கிறோம். போரினால் மிகக்கடுமையாக பாதிப்புற்ற பிரதேசங்களில்
ஒன்று என்றவகையில் மேற்படி தரமுயர்த்தும் செயற்பாடு, நீடித்ததும்
நிலையானதுமான அபிவிருத்தியை நோக்கி கிளிநொச்சி நகரை முன்னகர்த்தும் என்ற
திடமான நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

எனினும், ஒரு ஊள்ளூராட்சி அமைப்பொன்றினை தரமுயர்த்துவது தொடர்பாக
கருத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டிய விடயங்கள் அனைத்தும் கிளிநொச்சியை
நகரசபையாக்கும் விடயத்தில் எச்சரிக்கையோடு தவிர்க்கப்பட்டிருப்பதோடு,
ஒருசில தனிநபர்களின் அரசியல் அபிலாசைகள் மட்டுமே
முன்னிறுத்தப்பட்டிருப்பதும் வேதனையான விடயமாகும். கிளிநொச்சி நகர்
உள்ளடங்கிய கரைச்சி பிரதேச சபையில் பதினோரு உறுப்பினர்களை கொண்டிருக்கும்
கட்சியென்ற அடிப்படையில் பின்வரும் விடயங்களை தங்களது மேலான கவனத்திற்கு
கொண்டுவருகிறோம்.

1. நகருக்குள் உள்ளடக்கப்படவேண்டிய பிரதேசங்கள் தொடர்பிலோ அல்லது அதன்
எல்லைகளாக வரக்கூடிய கிராமங்கள் தொடர்பிலோ அங்கே வசிக்கக்கூடிய மக்களுடனோ அல்லது அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் அமைப்புகளுடனோ
எந்தவிதமான கலந்துரையாடலும் எந்த சந்தர்பத்த்திலும் அதற்கு
பொறுப்பானவர்களால் நடத்தப்பட்டிருக்கவில்லை.

2. கரைச்சி பிரதேச சபைக்குள் மொத்தமாக 21 வட்டாரங்கள் இருப்பதும்
அவற்றுள் குறிப்பிடத்தக்க அளவு நகர சபை என்ற பரிமாணத்துக்குள்
வரக்கூடியதாக இருந்தாலும், வெறும் மூன்று வட்டாரங்களை மட்டுமே கிளிநொச்சி
நகரசபைக்கென ஒதுக்கீடு செய்திருப்பது, இயற்கைக்கு மாறானது என்பதோடு,
நிர்வாக செயற்பாட்டுக்குரிய சபையொன்றினை அமைப்பதற்கும் சவாலானதாக
இருக்கும்.

3. நகரின் மத்தியிலும், அண்மையிலும் உள்ள சில கிராமங்கள் திட்டமிட்ட
வகையில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், நகரிலிருந்து ஐந்து
கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு பகுதி நகரசபை எல்லைக்குள்
உள்வாங்கப்பட்டிருக்கிறது.

4. நகரின் முக்கிய பகுதிகளாக தற்போது கருதப்படும் பல பகுதிகள் எந்தவித
நியாயமுமற்று வெளியே தள்ளப்பட்டிருப்பது அங்கே நீண்ட காலமாக வசித்துவரும்
குறிப்பிட்ட ஒரு சமூகத்தின்மீது திட்டமிடட வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு
தாக்குதலாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே, குறுகிய அரசியல் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி, அங்கே
வசிக்கக்கூடிய மக்கள்மத்தியில் நிரந்தரமான பிரிவினை உருவாக்கக்கூடிய;
எவருடனும் கலந்தாலோசிக்கப்படாத நகரசபை உருவாக்கும் முயற்சியை மறுபரிசீலனை
செய்து, சரியானதும் பொருத்தமானதுமான பொறிமுறையொன்றின் கீழே கிளிநொச்சியை
நகர சபையாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவுடன்
வேண்டி நிற்கிறோம் எனக் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

Leave a Comment