முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை புனரமைக்க அரச நிதியில் இருந்து ரூ. 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மறுத்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவினால் இன்று சபையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாங்கள் ரூ. 400 மில்லியன் அல்லது வெறும் நான்கு ரூபாய் கூட அவ்வாறு ஒதுக்கவில்லை.
இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளை கவனிப்பதற்கு சட்டரீதியாக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் பண்டார, ராஜபக்சவின் வீட்டின் கூரை வழியாக மழை நீர் வெளியேறுகிறதா என கேள்வி எழுப்பினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1