கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் 13 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.
எனினும் இந்த விபத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லை எனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலாவி பகுதியிலிருந்து கற்பிட்டியை நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் முன் பக்கம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துக்கு காரணமான சொகுசு சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸார் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1