பெண் போல மாறுவேடமணிந்து பொருட்களை திருடிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று முனதினம் (26) கைது செய்துள்ளனர்.
அவரால் திருடப்பட்ட குக்கர், தண்ணீர் மோட்டார்கள் உள்ளிட்ட பல பொருட்களை மீட்டனர்.
சந்தேகநபரின் வாக்குமூலங்களின்படி, பெண் வேடமிட்டு, அயலார் வீடுகளுக்குள் பிரவேசிக்கும் போது, அயலவர்களுக்கு சந்தேகம் வராதவாறு, அதற்குப் பயன்படுத்தப்பட்ட 7 புடவைகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லாகொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1