25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தம்பு ஈஸ்வரமோகன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (27), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி தம்பு ஈஸ்வரமோகனின் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், விலங்கியல் துறையின் முன்னாள் தலைவரும், விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தம்பு ஈஸ்வரமோகன் விலங்கியலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப் பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு

east tamil

வெளிநாடு செல்லும் கனவுக்காக போதைப்பொருள் விற்ற மாணவன் கைது

east tamil

வேலை நிறுத்தத்துக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கங்கள்!

Pagetamil

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

Leave a Comment