முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாட்டு மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க சற்று முன்னர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மன்னிப்பு கடிதம் நீதியமைச்சரிடமிருந்து சில நிமிடங்களுக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாக தெரிவித்த ஏகநாயக்க, அந்த கடிதம் விரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1