பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர இராணுவ தளபதியினை வரவேற்றார்.
நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது.
புதிதாக பதவியேற்ற இலங்கை ராணுவ தளபதியின் யாழ் மாவட்ட முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ராணுவ தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிகழ்வுகளில் இன்று கலந்து கொள்கின்றார்.


What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1