Pagetamil
சினிமா

அரசியலில் குதிக்கிறாரா?: த்ரிஷா விளக்கம்!

அரசியலில் குதிப்பது பற்றிய தகவலை, த்ரிஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக உணர்ந்தவர்.

2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு த்ரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது.

ஆனால், இது குறித்து த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் த்ரிஷா அரசியலில் நுழைவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!