நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த ஜெனரேட்டரின் திருத்தப்பணி முடிவடைவதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய மின் கட்டமைப்புடன் அது மீண்டும் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பொறியியலாளர்கள் தற்போது திருத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை முதல் பிரதான மின் கட்டமைப்புடன் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும்.
இதனால் மின்வெட்டு நேரம் குறைவடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.