25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

யாழ்- கிளி புகையிரதத்தில் சம்பவம்: டிக்கெட் எடுக்காத அரச உத்தியோகத்தர்கள் இடைநடுவில் இறங்கி தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி நேற்று (24) காலை புகையிரதத்தில் பயணித்த அரச உத்தியோகத்தகர்கள்‌ சிலர்‌, பளை புகையிரத நிலையத்தில்‌ இடைநடுவில்‌ இறங்கி தப்பியோடியுள்ளனர்

வழமை போல்‌ யாழ்‌.ராணி புகையிரதத்தில்‌ கிளிநொச்சி நோக்கிப்‌ பயணித்த உத்தியோகத்தர்களில்‌ சிலர்‌ பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளாது ‘பயணித்துள்ளனர்‌..

மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும்‌ அதனை பெற்றுக்கொள்ளாது அவர்கள்‌:
‘பயணித்துள்ளனர்‌.

இந்நிலையில்‌, நேற்றைய தினம்‌ பயணச்சீட்டு. பரிசோதனை செய்யும்‌ புகையிரத திணைக்கள அதிகாரிகள்‌, பயணிகளிடம்‌ பரிசோதனைகளை மேற்கொண்ட போது,
சிலர்‌ பயணச்சீட்டு. இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம்‌ பயணக்‌ கட்டணமும்‌ அபராதத்‌ தொகையும்‌ அறவிடப்பட்டது.

அத்தோடு, மூன்றாம்‌ வகுப்புக்கு பயணச்‌:சிட்டையை பெற்றுவிட்டு, இரண்டாம்‌ வகுப்பில்‌
‘பயணித்தவர்களும்‌. எச்சரிக்கப்பட்டுள்ளனர்‌.

இந்த நிலையில்‌ கிளிநொச்சி நோக்கிப்‌ பயணித்த மேலும்‌ சிலர்‌, புகையிரத திணைக்கள அதிகாரிகளின்‌ பரிசோதனைக்கு முன்பாகவே இடைநடுவில்‌ பளை புகையிரத நிலையத்தில்‌ இறங்கி தலைதெறிக்க தப்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

east tamil

போயா தினத்தில் மதுபான விற்பனை – ஒருவர் கைது

east tamil

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

east tamil

Leave a Comment