நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் நுழைந்து, நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை போல, வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக ஒரேயொரு போனஸ் ஆசனத்துடன் தெரிவாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் இராமச்சந்திரன் சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு சுயேட்சைக்குழு துரோகம் செய்ய, ‘வழக்கம் போல’ எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர் ஒருவர் காலைவார, தவிசாளர் பதவியை இழந்ததாக, கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம்(23) வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், சுயேட்சை அணிக்கும் எழுத்துபூர்வ உடன்பாடு உண்டு. உடன்பாட்டின்படி தமது பதவிக்காலத்தை அனுபவித்த சுயேட்சை அணி, அதன் பின்னர் உடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளது.
இன்றைய தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் க.சதீஷ், எதிர்தரப்பின் சார்பில் சுரேன் போட்டியிட்டனர்.
சுரேனுக்கு ஆதரவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சை குழுவை சேர்ந்த நால்வர் , விடுதலைக்கூட்டணி உறுப்பினர் ஒருவர் ஆகிய 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இவருடன் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உறுப்பினர் க.சதீஸ்க்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆறு பேரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் இருவருமாக 08 வாக்குகள் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மயூரன் கொழும்பில் தங்கியுள்ளார். அவர் பரீட்சைக்கு தோற்றுவதால் சமூகமளிக்கவில்லையென கூறப்பட்டது.எனினும், தற்போது பரீட்சை இடைவெளியென்பதால் வாக்கெடுப்பிற்கு வருமாறு கட்சி அழைத்தது. ஆனால் அவர் வரவில்லை.
அவரை தவிசாளர் ஆக்குவதற்கான இரகசியபேச்சு, சுமந்திரன் தரப்பினரால் நேற்று வரை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அது வெற்றியளிக்கவில்லை.
க.சதீஷ் தவிசாளராகுவதை சுமந்திரன் எதிர்ப்பதால், அந்த அணியை சேர்ந்த மயூரன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.
அந்நிலையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் 08 வாக்குகளை பெற்று சமனிலையாக காணப்பட்டமையால் திருவருள் சீட்டு மூலம் இ.சுரேன் தவிசாளராக தெரிவானார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை சேர்ந்த சுரேன், கடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்டு, போனஸ் உறுப்பினராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு-சுயேட்சை அணி ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்த விபரம் வருமாறு-